உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவில் மோதல்; போலீசாரை தாக்கிய 6 பேர் கைது

Published On 2022-06-17 08:50 GMT   |   Update On 2022-06-17 08:50 GMT
  • கோவில் திருவிழாவில் மோதலில் போலீசாரை தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • 6 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் காளியம்மன்கோயில் திருவிழாவையொட்டி நேற்று இரவு 7 மணிக்கு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பிற்காக வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, ஏடுகள் ராஜேந்திரன்,ரங்கநாதன், பாண்டி பழனிவேல்ராஜன் ஆகியோர் சென்றிருந்தனர்.

இந்நிலையில் 8.30 மணியளவில் நாடகமேடை முன்பாக திடீரென்று இருதரபினருக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்து சேர்களை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அவர்களை விலக்கச் சென்ற போலீஸ் ஏட்டு ராஜேந்திரன்,ரங்கநாதன் ஆகியோரை அதே ஊரைச் சேர்ந்த ரஞ்சித்,வீரணன் ஆகியோர் சேர்ந்துகொண்டு தாக்கி காயப்படுத்தினர்.இதில் போலீசார் இருவருக்கும் கீழ் உதடு கன்னம் பகுதியில் ரத்த காயம் ஏற்பட்டது. உடனே மற்றபோலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து வந்தனர். அப்போது அங்கு வந்த விஜய் பாண்டி, பழனி, பாஸ்கரன் அழகுமலை ஆகியோர் போலீசாரிடம் இருந்து ரஞ்சித், வீரணன் ஆகியோரை விடுவித்தனர்.

இது சம்பந்தமாக போலீஸ் ஏட்டு ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில்வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி முருகேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ரஞ்சித், வீரணன், விஜய் பாண்டி, பழனி, பாஸ்கரன், அழகுமலை ஆகிய 6பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News