உள்ளூர் செய்திகள்

மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி மதுரையில் இன்று பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க. வினர் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய-மாநில அரசுகள் வரிகளை விதித்து மக்களுக்கு வலிகளை தருகிறது

Published On 2022-07-27 09:06 GMT   |   Update On 2022-07-27 09:06 GMT
  • மத்திய-மாநில அரசுகள் வரிகளை விதித்து மக்களுக்கு வலிகளை தருகிறது என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
  • தமிழகத்தின் அரசியல் தலைநகரம் மதுரையாகும் மதுரை மண்ணில் தான் தேமுதிக தொடங்கப்பட்டது.

மதுரை

மதுரையில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. துணை பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் அப்போது அவர் பேசியதாவது-

தமிழகத்தின் அரசியல் தலைநகரம் மதுரையாகும் மதுரை மண்ணில் தான் தேமுதிக தொடங்கப்பட்டது. எங்களது திருமணம் மற்றும் குலதெய்வ வழிபாடு, அரசியல் மாநாடுகள் என்று அனைத்துமே மதுரையில் தான் தே.மு.தி.க. நடத்தி வருகிறது.

இந்த மதுரை மண்ணில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்றைக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தே.மு.தி.க. ஆளும் கட்சி அல்ல, ஆண்ட கட்சியும் அல்ல. ஆனாலும் மக்கள் இங்கு திரண்டு இருக்கிறீர்கள் ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் நூறும் பீரும் கொடுத்து கூட்டம் கூட்டுகிறார்கள் அந்த வரிசையில் தற்போது பாரதிய ஜனதாவும் சேர்ந்திருக்கிறது.

தமிழகத்தில் ஆளுகின்ற தி.மு.க. அரசு தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் கொடுக்காத வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது மின்கட்டணத்தை உயர்த்துவோம் என்று தேர்தலுக்கு முன்பு சொல்லவில்லை. ஆனால் இப்போது மின்கட்டணத்தை அதிகரித்து இருக்கிறார்கள். அதுபோல மத்திய அரசு ஜி.எஸ்.டி. என்ற போர்வையில் மக்கள் மீது தினமும் வரியை சுமையை ஏற்படுத்தி வருகிறது கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் மீது மத்திய-மாநில அரசுகள் வரி என்ற பெயரில் வலியை ஏற்படுத்தி வருகின்றன. இதனை தே.மு.தி.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News