உள்ளூர் செய்திகள்

சவுபாக்கிய யோக வாராகி அம்மன்

அம்மன் கோவில் திருவிழா

Published On 2022-06-28 09:39 GMT   |   Update On 2022-06-28 09:39 GMT
  • சவுபாக்கிய யோக வாராகி அம்மன் கோவில் உற்சவ விழா நாளை தொடங்குகிறது.
  • வருகிற 4-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

மதுரை

மதுரை வில்லாபுரம் அருகே உள்ள எம்.எம்.சி. காலனி காவேரி நகர் 6-வது தெருவில் சவுபாக்கிய யோக வாராகி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலின் உற்சவ விழா நாளை (29-ந் தேதி) தொடங்கி வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது.

முதல் நாளான நாளை காலையில் மகா கணபதி ஹோமம் நடக்கிறது. விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் காலை, மாலையில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

3-ந் தேதி மாலை அம்பாளுக்கு காய்கறி அலங்காரமும், உற்சவருக்கு உன்மத்த வராகி அலங்காரமும் நடக்கிறது.

விழாவில் சிகர நிகழ்ச்சியாக வருகிற 4-ந்தேதி சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் காலை 9:15 முதல் 10.15 மணிக்குள் விமரிசையாக நடக்கிறது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு சுவாமி- அம்பாள் திருவீதி உலா நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News