உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாளஅட்டை வழங்க சிறப்பு முகாம்கள்

Published On 2022-08-16 07:29 GMT   |   Update On 2022-08-16 07:29 GMT
  • மாற்றுத்திறனாளிகளுக்கு அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது
  • வருகின்ற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது

கரூர்:

கிருஷ்ணராயபுரம் வட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று முதல் வரும் 20 வரை அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2, மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் கிருஷ்ணராயபுரம் வட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் இன்று ( 16-ந் தேதி) கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நாளை (17-ந் தேதி) பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுதாதார நிலையத்திலும், நாளை மறுநாள் (18-ந் தேி) பழைய ஜெயங்கொண்டம் சமுதாயக் கூடத்திலும், வரும் 20-ந் தேதி பாப்பக்காப்பட்டி சமுதாய கூடத்திலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

மாற்றுத்திறனாளிகள் தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள முகாமில் கலந்து கொண்டு மருத்துவச் சான்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மாற்றுத் திறனாளிகள் தங்களது ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ- 4 ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு உதவி உபகரணங்கள், கடனுதவி, திறன் பயிற்சி, பசுமை வீடு வழங்கும் திட்டம், பிற உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பம் அளித்தல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News