உள்ளூர் செய்திகள்

பாக்சிங் போட்டியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 14 பதக்கம் பெற்று சாதனை

Published On 2022-06-20 08:54 GMT   |   Update On 2022-06-20 10:16 GMT
  • மாநில ஸ்டேர் அமெச்சூர் பாக்சிங் போட்டியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 14 பதக்கம் வென்றனர்.
  • கரூர் திரும்பியவர்களுக்கு உற்சாக வரவேற்பு

கரூர்:

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தமிழ்நாடு ஸ்டேர் அமெச்சூர் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் 47 கிலோ எடை பிரிவில், பாலாஜி வெள்ளி, 36 கிலோ எடை பிரிவில் பூபேஷ் வெண்கலம், 12 வயதுக்கு உட்பட்டோடர் பிரிவில் 28 கிலோ எடை பிரிவில் சுஜித்குமார் வெண்கலம், 17 வயதுக்குட்பட்டோர் 65 கிலோ எடை பிரிவில் ஹேமலதா தங்கம், 14 வயதுக்குட்பட்டோர் 65 கிலோ எடை பிரிவில் ஜெய்ஸ்ரீ தங்கம், 12 வயதுக்குட்பட்டோர் 38 கிலோ எடை பிரிவில் சவுபாக்யா வெள்ளி.

14 வயதுக்கு உட்பட்டோர் 40 கிலோ எடை பிரிவில் லோகபிரகாஷ் வெண்கலம், 47 கிடை எடைபிரிவில் சிவனேஷ் வெள்ளி, 14 வயதுக்கு உட்டோர் 38 கிலோ எடை பிரிவில் கவுதம் வெண்கலம், 27 வயதுக்கு உட்பட்டோர் 60 கிலோ எடைபிரிவில் ஆகாஷ் தங்கம், 14 வயதுக்கு உட்பட்டோர் மியூசிக் பார்மில் ஜி.ரம்யா, தேவஸ்ரீ, சபிதா ஆகியோர் தங்கப்பதக்கம் என கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் தங்கம், 3 பேர் வெள்ளி, 4 பேர் வெண்கலம் என 14 மாணவ, மாணவிகள் பதக்கங்களை வென்றனர். வென்றனர்.

போட்டியில் வெற்றி பெற்று கரூர் திரும்பிய மாணவ, மாணவிகளை தலைமை பயிற்சியாளரும், கரூர் மவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் செயலாளருமான ரவிகுமார், முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷணன் ஆகியோர் பாராட்டினர்.  

Tags:    

Similar News