உள்ளூர் செய்திகள்

காவல் துறை ஒய்வுபெற்ற அலுவலர் நலச்சங்க கூட்டம்

Update: 2022-08-15 07:02 GMT
  • காவல் துறை ஒய்வுபெற்ற அலுவலர் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது.
  • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

கரூர்:

கரூர் மாவட்ட காவல் துறை ஒய்வுபெற்ற அலுவலர் நலச்சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. செயலாளர் கந்தசாமி, பொருளாளர் கிருஷ்ணன், துணைத்தலைவர் வேலுசாமி, துணைச் செயலாளர் மனோகரன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அரசு பேருந்துகளில் ஒய்வுபெற்ற காவல்துறையினர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 7-வது ஊதியக்குழுவில் வழங்கப்பட்ட சம்பள விகிதத்தில் ஏற்பட்டுள்ள குறை பாடுகளை சரி செய்ய வேண்டும். காவலராக சேர்ந்து 35 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வருபவர்களுக்கு சரியான பதவி உயர்வு கொடுக்கப்படாமல் இருப்பதை சரி செய்ய வேண்டும். காவல் துறை பணியில் இருந்த போது மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது போல, ஒய்வு பெற்ற பிறகும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை கேண் டீனில் மலிவு விலையில் மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News