உள்ளூர் செய்திகள்

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பணிக்கு அரசாணை பிறப்பிக்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

Published On 2022-08-28 07:03 GMT   |   Update On 2022-08-28 07:03 GMT
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.253 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட தேங் காப்பட்டணம் துறைமுக கட்டுமானப் பணிகள்
  • இரையுமன் துறை மீனவர் கிராமத்தை கடலரிப்பிலிருந்து நிரந்தரமாக பாதுகாப்பதற்காக தொடர்தூண்டில் வளைவுகள் அமைக்க ரூ.30 கோடி மதிப்பீட்டில் திட்டம்

நாகர்கோவில் :

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு மறு சீரமைப்பு பணியை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தொடங்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சரை விஜய்வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோருடன் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, திருவனந்த புரம் மறை மாவட்டம் தூத்தூர் மண்டல முதன்மை தந்தை பெபின்சன், கோட்டாறு கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழுமம் இயக்குனர் டன்ஸ்டன், தமிழ்நாடு மீனவர்காங்கிரஸ்தலைவர் ஜார்ஜ் ராபின்சன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான், பாதிரியார்கள் கிளீட்டஸ், அம்புறோஸ் ஆகியோர் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

அப்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.253 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட தேங் காப்பட்டணம் துறைமுக கட்டுமானப் பணிகள் உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு தொடங்கப்படும் என உறுதி அளித்தார். அதேபோல், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் தாமிரபரணி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் மணல் திட்டுக்கள் உருவா கிக்கொண்டே இருக்கின் றது. அடிக்கடி மணல் திட்டுக்களை அகற்ற ஏது வாக மணல் அள்ளும் எந்திரம் ஒன்று நிரந்தரமாக தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருக்கும்படி ஆவன செய்யுமாறு கோரிக்கை வைத்தனர்.

அதற்கு முதல்-அமைச்சர் மணல் அள்ளும் எந்திரம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் நிரந்தரமாக நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

மேலும், இரையுமன் துறை மீனவர் கிராமத்தை கடலரிப்பிலிருந்து நிரந்தரமாக பாதுகாப்பதற்காக தொடர்தூண்டில் வளைவுகள் அமைக்க ரூ.30 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு நபார்டுக்கு அனுப்பப்பட் டுள்ளது. அதனை துரிதப்படுத்தி பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என முதல்-அமைச்சர் உறுதி அளித்தார். மேலும் ஐ.ஆர். இ.எல். மீனவ கிராமங்களில் கனிம மணல் எடுப்பதற்கு வழங் கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News