உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் பாரதிய ஜனதாவினர் இன்று உண்ணாவிரதம்

Published On 2022-07-05 08:44 GMT   |   Update On 2022-07-05 08:44 GMT
  • போராட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது
  • காலை தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை வரை நடந்தது

நாகர்கோவில் :

தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

குமரி மாவட்ட பார திய ஜனதா சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் ஜெகநாதன், வினோத், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தை எம். ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பொருளாளர் முத்துராமன், துணை தலைவர்கள் தேவ், சொக்கலிங்கம் அமைப்புச் செயலாளர்கள் கிருஷ்ணன், கிருஷ்ணகுமார் மாநகர பார்வையாளர்கள் அஜித்குமார், நாகராஜன் மாநகராட்சி கவுன்சிலர்கள் சுனில், ரமேஷ், அய்யப்பன் உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் மாவட்ட தலைவர் தர்மராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று விட்டு, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மனசாட்சியில்லாத அரசாக இந்த அரசு விளங்குகிறது.

மத்திய அரசு 2 முறை பெட்ரோல்-டீசல் விலையை குறைத்த பிறகும் கூட தி.மு.க. அரசு குறைக்கவில்லை. தமிழகத்தை காக்க தான் இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

நம்மை வருத்தி இந்த போராட்டத்தை வெற்றி அடைய செய்ய வேண்டும்.தமிழகம் முழுவதும் அமைப்பு ரீதியாக 60 மாவட்டங்களில் உண்ணா விரதம் நடந்து வரும் நிலையில் அங்கு அனுமதிகள் அளிக்கப்பட்டது. ஆனால் குமரி மாவட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்திற்கு பந்தல் அமைக்க நேற்று இரவு கூட அனுமதி மறுக்கப்பட்டது.பல போராட்டத்துக்கு பிறகு இன்று காலை தான் பந்தல் அமைக்க அனுமதி அளித்தார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News