உள்ளூர் செய்திகள்

கோட்டார் சிதம்பரம் வீதியில் ஸ்ரீமணி ஆயுர்வேதம் நடத்தும் மருத்துவ முகாம்

Published On 2023-07-12 07:46 GMT   |   Update On 2023-07-12 08:06 GMT
  • 16-ந் தேதி நடக்கிறது
  • இலவசமாக 15 நாட்களுக்கு மருந்து மாத்திரைகளையும் வழங்குகிறார்கள்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் கோட்டார் பகுதி ஸ்ரீ நாராயண குரு மண்டபம் அருகில் உள்ள சிதம்பரம் வீதியில் உள்ள ஸ்ரீமணி ஆயுர்வேதம் ஆஸ்பத்திரி சார்பில் வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆயுர்வேத இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரைa முகாம் நடைபெறுகிறது.

இதில் ஆயுர்வேத மருத்துவத்தில் அனுபவம் பெற்ற 5 மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கி இலவசமாக 15 நாட்களுக்கு மருந்து மாத்திரைகளையும் வழங்குகிறார்கள்.

மேலும் முகாமில் எலும்பு அடர்த்தியை பரிசோதனை செய்யும் பி .எம் .டி. பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. இது மற்ற நாட்களில் பரிசோதனை செய்தால் ரூ.2000 வரை கட்டணமாக செலவாகும் பரிசோதனை ஆகும். அதேபோன்று இலவச ரத்த பரிசோதனையும் செய்யப்படுகிறது.

முகாமில் அனைத்து நோய்களுக்கும் ஆயுர்வேத மருத்துவர்கள் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கி நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய பரிந்துரைகளையும் வழங்கு கிறார்கள்.

முகாமிற்கு வருபவர்கள் மருத்துவ ஆஸ்பத்திரி செல்போனை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். அதற்குரிய எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த முறை நடந்த இலவச மருத்துவ முகாமில் 100-க்கணக்கான நோயாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். இந்த மாதம் நடைபெறும் முகாமிலும் பொது மக்கள் கலந்து கொண்டு பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மருத்துவ குழுவினர் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News