உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.

தலைவாசல் ஏரியில் அனுமதியின்றி மண் கடத்திய 4 பேர் கைது ஜே.சி.பி., 3 டிராக்டர்கள் பறிமுதல்

Published On 2022-08-29 10:09 GMT   |   Update On 2022-08-29 10:09 GMT
  • பொதுப்ப ணித்துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது.
  • இந்த ஏரியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக 10-க்கும் மேற்பட்ட டிராக்டர் மற்றும் டிப்பர் லாரிகளில் கிராவல் மண் கடத்தப்படுவதாக சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகத்திற்கு புகார் சென்றது.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் தலைவாசல் பேருந்து நிலையம் அருகே பொதுப்ப

கைதான 4 பேர்.    

 

ணித்துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக 10-க்கும் மேற்பட்ட டிராக்டர் மற்றும் டிப்பர் லாரிகளில் கிராவல் மண் கடத்தப்படுவதாக சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகத்திற்கு புகார் சென்றது.

இதனையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் ஏரி பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டர்க ளில் மண் கடத்திக் கொண்டிருப்பதை பார்த்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

இதில் 4 பேர் போலீ சாரிடம் சிக்கினர். மேலும் 5 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர், பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் அரும்பட்டு பகுதியை சேர்ந்த சிவமணி(32), தலைவாசல் பட்டுதுறையை சேர்ந்த சரவணன் (36) செல்வம்(30), மும்முடி பகுதியை சேர்ந்த பூபதி (47) என்பது தெரியவந்தது.

4 பேரையும் கைது செய்த போலீசார் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் வாகனத்தை யும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய முக்கிய குற்றவா ளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்த டிராக்டர் வாகனங்களை விடுவிக்க வேண்டும் என டிராக்டர் உரிமையாளர் மற்றும் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் உள்ளே சென்று ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்தனர். உடனடியாக அவர்களை காவல் நிலையத்தில் இருந்து போலீசார் வெளியேற்றினார்கள்.

Tags:    

Similar News