உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பள்ளிகளில் முழுமையான பாடத்திட்டத்தை பின்பற்ற அறிவுறுத்தல்

Published On 2022-06-22 10:15 GMT   |   Update On 2022-06-22 10:15 GMT
  • பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு 35 சதவீதம் பாடங்கள் குறைக்கப்பட்டன.
  • நடப்பு கல்வி ஆண்டில்கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றிவழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் :

கடந்த2020ம் ஆண்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியதில் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டன. ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சில மாதங்கள் நேரடியாகவும், பல மாதங்கள் ஆன்லைன்வழியிலும் பாடங்கள் நடத்தப்பட்டன. பள்ளிகளுக்கு அதிகளவில் விடுமுறை விடப்பட்டதால், பாடத்திட்டத்தின் அளவு குறைக்கப்பட்டது.

அதன்படி வழக்கமான பாடத்திட்டத்தில் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 50 சதவீதம்,9ம் வகுப்புக்கு 38, 10ம் வகுப்புக்கு, 39, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு 35 சதவீதம் பாடங்கள் குறைக்கப்பட்டன.இதன் அடிப்படையில் பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டன.

நடப்பு கல்வி ஆண்டில்கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் முழு கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதையடுத்து, கொரோனாவுக்கு முந்தைய நிலையில் இருந்தபடியே பாடத் திட்டமும் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.1 முதல் பிளஸ் 2 வரைஅனைத்து வகுப்பு மாணவர்களுக்கும்2019-20ம் கல்வி ஆண்டில் அமலான முழு பாடத்திட்டம் மற்றும் பாடங்கள், நடப்பு கல்வி ஆண்டிலும் நடத்தப்படும் என்றும், தற்போதைய நிலையில் பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News