உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி மாவட்டத்தில் தொடர் மழை அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2023-02-04 05:06 GMT   |   Update On 2023-02-04 05:06 GMT
  • தேனி மாவட்டத்தில் பகல் பொழுதில் வறண்ட வானிலையே நிலவி வந்த நிலையில் கடந்த 2 நாட்கள் பரவலாக மழை பெய்து வருகிறது.
  • அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நீர்வரத்து வரத் ெதாடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கூடலூர்:

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வந்தது. பகல் பொழுதில் வறண்ட வானிலையே நிலவி வந்த நிலையில் கடந்த 2 நாட்கள் பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நீர்வரத்து வரத் ெதாடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 126.75 அடியாக உள்ளது. வரத்து 175 கன அடி. திறப்பு 900 கன அடி. இருப்பு 3996 மி.கன அடி. வைகை அணையின் நீர்மட்டம் 54.10 அடி. வரத்து 732 கன அடி. திறப்பு 769 கன அடி. இருப்பு 2575 மி.கன அடி.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48.35 அடி. வரத்து 35 கன அடி. திறப்பு 75 கன அடி. இருப்பு 309 மி.கன அடி.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 95.12 அடி. திறப்பு 25 கன அடி. இருப்பு 54.92 மி.கன அடி.

பெரியாறு 2, தேக்கடி 8.8, கூடலூர் 2.6, சண்முகாநதி 4.4, உத்தமபாளையம் 2.2, போடி 15.2, வைகை அணை 8, மஞ்சளாறு 6, சோத்துப்பாறை 12, பெரியகுளம் 7, வீரபாண்டி 9, அரண்மனைபுதூர் 12.2, ஆண்டிபட்டி 10.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News