உள்ளூர் செய்திகள்

பாலக்கோடு காவல்துறை சார்பில் தலை கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பாலக்கோட்டில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி

Published On 2022-07-31 09:20 GMT   |   Update On 2022-07-31 09:20 GMT
  • இரு சக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும்.
  • விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதமாவதை தடுக்கும் பொருட்டு கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு காவல்துறை சார்பில் சாலை விதிகளை மதிப்போம் விபத்தினை தடுப்போம், தலைகவசம் உயிர் கவசம் என்ற முழக்கத்தோடு மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் நடைப்பெற்றது.

இந்த பேரணியில் காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து பாலக்கோடு காவல் நிலையம் முன்பு தொடங்கி கடைவீதி, ஸ்தூபி மைதானம், பேருந்து நிலையம், தக்காளி மார்க்கெட், புறவழி சாலை,எம்.ஜி.ரோடு உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளின் வழியாக சென்று பொது மக்களிடம் தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

பின்னர் இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். தவறும் பட்சத்தில் விதிமுறைகளின்படி சம்மந்தப்பட்ட இரு சக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும்.

இந்திய தர நிர்ணய சான்று பெற்ற தலைக்கவசம் மட்டுமே அணிய வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பாலக்கோடு பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதமாவதை தடுக்கும் பொருட்டு கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா மற்றும் பெண் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News