உள்ளூர் செய்திகள்

முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

தருமபுரியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,528 வழக்குகளுக்கு சமரச தீர்வு

Published On 2022-06-27 08:18 GMT   |   Update On 2022-06-27 08:18 GMT
  • சமரச தீர்வு அதில் 1,417 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டன.
  • மொத்தம் 1,528 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டு சமரச தொகை ரூ.12 கோடியே 99 லட்சத்து 6 ஆயிரத்து 282-க்கு பேசி முடிக்கப்பட்டது.

தருமபுரி, 

தருமபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இது தொடர்பாக முதன்மை மாவட்ட நீதிபதியும் (பொறுப்பு) மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவருமான முனுசாமி, தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதி திலகம் ஒப்புதலுடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

தருமபுரி மாவட்ட நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் உத்தரவிடப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 4 தாலுகா நீதிமன்ற வளாகங்களிலும் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இந்த மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 1,657 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. சமரச தீர்வு அதில் 1,417 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டன.

அதற்கான சமரச தொகை ரூ.10 கோடியே 18 லட்சத்து 81 ஆயிரத்து 150-க்கு சமரசம் பேசி முடிக்கப்பட்டது. மேலும் 310 வங்கி வாராக்கடன் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

அதில் 111 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டன. அதற்கான சமரச தொகை ரூ.2 கோடியே 80 லட்சத்து 25 ஆயிரத்து 132-க்கு சமரசம் பேசி முடிக்கப்பட்டது.

மொத்தம் 1,528 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டு சமரச தொகை ரூ.12 கோடியே 99 லட்சத்து 6 ஆயிரத்து 282-க்கு பேசி முடிக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News