உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

Published On 2022-06-28 09:53 GMT   |   Update On 2022-06-28 09:53 GMT
  • மகிளா நீதிமன்ற நீதிபதி மற்றும் முதன்மை சார்பு நீதிபதிகள் வக்கீல்களிடம் அதிக கெடுபிடி காட்டுவதாகவும், எனவே அவர்களை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் வக்கீல்கள் தரப்பில் கூறுகின்றனர்.
  • பார் கவுன்சில் தலைவர் பாலு தலைமையில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

தருமபுரி, 

தருமபுரி அடுத்த தடங்கத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இங்கு செயல்பட்டு வரும் பார் கவுன்சிலில் சுமார் 450-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் செயலாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் மகிளா நீதிமன்ற நீதிபதி மற்றும் முதன்மை சார்பு நீதிபதிகள் வக்கீல்களிடம் அதிக கெடுபிடி காட்டுவதாகவும், எனவே அவர்களை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் வக்கீல்கள் தரப்பில் கூறுகின்றனர்.

அத்துடன் பல வருடங்களாக தொழில் நடத்தி வரும் வக்கீல்களுக்கு அவர்களது பணிக்காலத்திற்கேற்ப வைரவிழா, பொன்விழா கொண்டாட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார் கவுன்சில் தலைவர் பாலு தலைமையில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த புறக்கணிப்பு போராட்டம் ஒரு வாரத்தை எட்டியுள்ளது.

Similar News