உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் ஆதவா அறக்கட்டளை நிறுவனர் பால குமரேசன் விளையாட்டு உபகரணங்களை வழங்கிய போது எடுத்த படம்.

ஆறுமுகநேரியில் ரூ.75 ஆயிரம் மதிப்பில் கிரிக்கெட் உபகரணங்கள்-ஆதவா தொண்டு நிறுவனம் வழங்கியது

Published On 2022-06-24 09:02 GMT   |   Update On 2022-06-24 09:02 GMT
  • ஆதவா தொண்டு நிறுவனத்தின் சார்பில் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  • ஆறுமுகநேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் இயங்கி வரும் ஆதவா தொண்டு நிறுவனத்தின் சார்பில் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இளைஞர்களிடையே விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு உதவிகளை செய்வது எனவும் ஆதவா தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஆறுமுகநேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் ராஜமன்னியபுரம் பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ், தருவை சூப்பர் கிங்ஸ், லைக்கன்ஸ், ட்ரு ஸ்பார்டன்ஸ் ஆகிய கிரிக்கெட் அணிகளுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இவற்றை ஆதவா அறக்கட்டளை நிறுவனர் பால குமரேசன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் அணிகளை சேர்ந்த ராஜ் பெனிடஸ், ஆல்வின் சேவியர், நிவாஸ் கண்ணன், சுதன், ஸ்ரீராம், அஜித், சாம், சிவா, தேரடி, விக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News