உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் சாலையில் நெல்லை கொட்டி வைத்து தார்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர்.

கொள்முதல் நிலையம் இல்லாததால் நெல்லை சாலையில் கொட்டி வைத்து காத்திருக்கும் விவசாயிகள்

Published On 2022-07-02 06:54 GMT   |   Update On 2022-07-02 06:54 GMT
  • கோடை பருவத்தில் பம்புசெட் உதவியுடன் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
  • நெல்லை அருகில் உள்ள நெடுஞ்சாலையில் நன்கு உலர வைத்து பின்னர் உலர்ந்த கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

மெலட்டூர்:

பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம் அதனை சுற்றியுள்ள பகுதியில் கோடை பருவத்தில் பம்பு செட் உதவியுடன் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற் பயிர்கள் தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ள நிலையில் விவசாயிகள் தற்போது அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் அறுவடை செய்யக்கூடிய நெல்லை அருகில் உள்ள நெடுஞ்சாலையில் நன்கு உலர வைத்து பின்னர் உலர்ந்த நெல்லை சாலியமங்களம் அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

சாலியமங்களம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய நெல்லை கொட்டி வைக்க இடமில்லாததால் அருகில் நெடுஞ்சாலையில் கொட்டி வைத்து விற்பனைக்காக காத்து கிடக்கின்றனர். விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவரக்கூடிய நெல்லை உடனுக்கு உடன் கொள்முதல் செய்யாமல் 4 அல்லது 5 நாட்கள் காத்திருக்க வைத்து தான் கொள்முதல் செய்வதாகவும் தற்போது திடீர் மழை பெய்துவருவதால் காய்ந்த நெல்மணிகள் நனைந்து போகும் என்பதால் கொள்முதல் நிலையத்தில் நெல்லை தாமதம் இன்றி உடனுக்கு உடன் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News