உள்ளூர் செய்திகள்

ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த 3 வாலிபர்கள் கைது

Published On 2022-10-22 09:57 GMT   |   Update On 2022-10-22 09:57 GMT
  • 3 வாலிபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் வரப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான நம்பியூர், பொலவபாளையம், மலையப்பாளையம், எம்மாம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆடு மேய்க்கும் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் தொடர் ஆடு திருட்டு நடைபெற்று வந்தது.

கடந்த 19-ந் தேதி நல்லகட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மகேஷ் குமார் (32) என்பவரது பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் திருடப்பட்டது சம்பந்தமாக வரப்பாளையம் போலீஸ் நிலையத்தில் மகேஷ்குமார் புகார் மனு கொடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் நம்பியூர் மற்றும் வரப்பாளையம் போலீசார் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் வரபா ளையம் மற்றும் நம்பியூர் போலீசார் மலைய ப்பாளையம் இந்திரா நகர் காலனி பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டி ருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.

அப்பொழுது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் நம்பியூர் மற்றும் மலையப்பாளையம் பகுதியில் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பழங்கரை பகுதியை சேர்ந்த சேகர் (25) மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் நல்ல பிள்ளை பெற்றான் பகுதியை சேர்ந்த சூர்யா (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் 2 பேரும் ஆடுகளை திருடி திருப்பூர் மாவட்டம் கணக்கம் பாளையம் பகுதியில் கறிக்கடையில் வேலை செய்து வரும் சங்கர் (28) என்பவரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து நேற்று நம்பியூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயரத் 3 வாலிபர்களையும் கைது செய்து கோபி 2-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News