உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

ஜீவன் ரக்‌ஷா விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

Published On 2022-07-25 10:24 GMT   |   Update On 2022-07-25 10:24 GMT
  • சுரங்கமீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்காணும் பிரிவுகளில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
  • தனக்கு காயம் ஏற்பட்டாலும் தாமதமின்றி செயல்பட்டு உயிரை காப்பாற்றுபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர்மாவட்ட கலெக்டர் தினேஷ்பொ ன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுக்களான நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்கமீட்பு நடவடிக்கைகள் ஆகியவ ற்றில் ஈடுபட்ட மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்காணும் பிரிவுகளில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

சர்வோத்தம்ஜீவன் ரக்‌ஷாபதக்கம்:மிகவும் அபாயகரமாக நிலை யில் உள்ளவரைவீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்ப டுகிறது.உத்தம் ஜீவன் ரக்‌ஷாபதக்கம்: துணி ச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

ஜீவன் ரக்‌ஷாபதக்கம் : தனக்கு காயம் ஏற்பட்டாலும் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படும்.

மேற்காணும் 2022- ஆம் ஆண்டு ஜீவன் ரக்‌ஷாபதக்க விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதிற்கான விண்ணப்பதினை அன்னை சத்யா விளையாட்டரங்கம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்அலுவலகம், தஞ்சாவூரில் நேரில் வந்து விண்ணப்பத்தினை பெற்றுக் ெகாள்ளலாம். இவ்விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 10.8.2022-க்குள் மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞன் நலன் அலுவலகத்தில் நேரில் சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளபடுகிறது.

மேற்கண்டவிருது தொடர்பாக இதர விபரங்களை மாவட்ட விளையாட்டு அலுவல கத்தில் நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ (04362 - 235633) தொடர்பு கொண்டு விபரம் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News