உள்ளூர் செய்திகள்

வாரச்சந்தையில் கூடிய மக்களை படத்தில் காணலாம்.

வரத்து அதிகரிப்பால் நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விலை சரிவு

Update: 2022-06-28 09:26 GMT
  • 1000-ம் மேற்பட்ட ஆடுகளை அதிக அளவில் கொண்டு வந்தனர்.
  • இன்று விலை குறைவு ஏற்பட்டதால் வியாபாரிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் ஏமாற்றம் அடைந்தனர்.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியில் செவ்வாய் கிழமைகளில் வார சந்தை நடைபெறும். மிகவும் பிரசித்தி பெற்ற வாரச்சந்தையில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்கவும் விற்கவும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

தற்போது பண்டிகை காலங்கள் அனைத்தும் நிறைவு பெற்று விட்டதால் இறைச்சிக்கான தேவை குறைந்துவிட்டது. இதன் காரணமாக அசைவ பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் ஆடுகளை வாங்க ஆர்வம் காட்டாததால் விலை குறைந்து காணப்பட்டது.

விலை அதிகரித்து கிடைக்கும் என்ற காரணத்தால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் விற்பனைக்காக சுமார் 1000-ம் மேற்பட்ட ஆடுகளை அதிக அளவில் கொண்டு வந்தனர்.

நல்லம்பள்ளி வாரச் சந்தைக்கு இன்று அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தும் விலை கடந்த வாரங்களில் காட்டிலும் இன்று விலை குறைவு ஏற்பட்டதால் வியாபாரிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் ஏமாற்றம் அடைந்தனர். 

Similar News