உள்ளூர் செய்திகள்

குடிபோதையில் பயணியிடம் ரகளை செய்த பெண்.

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் குடிபோதையில் பெண்கள் ரகளை

Published On 2022-06-29 07:42 GMT   |   Update On 2022-06-29 07:42 GMT
  • திண்டுக்கல் பஸ்நிலையத்தில் தடையின்றி எந்த நேரமும் மதுபானங்கள் கிடைப்பதால் கூடுதல் விலை கொடுத்தாவது குடிமகன்கள் வாங்கி அதனை குடித்து செல்கின்றனர்.
  • அடிக்கடி பஸ்நிலையத்தில் பெண்கள் போதையில் ரகளையில் ஈடுபடுவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் தடையின்றி எந்த நேரமும் மதுபானங்கள் கிடைப்பதால் கூடுதல் விலை கொடுத்தாவது குடிமகன்கள் வாங்கி அதனை குடித்து செல்கின்றனர். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுவதும், பயணிகள் நடந்து செல்லும் பகுதியில் ஆடைகள் களைந்த நிலையில் கிடப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

நேற்றிரவு திண்டுக்கல் பஸ்நிலையத்தில் குடிபோதையில் ஒரு பெண் பஸ்சுக்காக நடந்து சென்றவரை வழிமறித்து தாக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதேபோல பஸ்நிலையத்தை ஒட்டியுள்ள தனியார் டிராவல்ஸ் வாகனங்கள் நிற்கும் சாலையில் ஏ.டி.எம் மையம் உள்ளது.

இந்த மையத்தில் போதையில் ஒரு பெண் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக அலங்கோலமாக படுத்துகிடந்தார். இதனால் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க கூட முடியாமல் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். திண்டுக்கல் பஸ்நிலையத்தில் இதுபோல குடிமகன்கள் மட்டுமின்றி குடிமகள்கள் தொல்லையும் அதிகரித்து வருகிறது.

மேலும் திருநங்கைகளும் போதையில் பணம் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதால் பயணிகள் பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டாலும் இதுபோன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

குறைந்த பட்சம் பஸ்நிலைய பகுதியில் இரவு நேர மதுபான விற்பனையை தடுத்தால் இதுபோன்ற சம்பவங்களை குறைக்க முடியும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

அடிக்கடி பஸ்நிலையத்தில் பெண்கள் போதையில் ரகளையில் ஈடுபடுவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Tags:    

Similar News