உள்ளூர் செய்திகள்

தச்சநல்லூர், நெல்லை மண்டல பகுதிகளில் 6 கட்டிடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு -மாநகராட்சி நடவடிக்கை

Published On 2022-08-18 09:24 GMT   |   Update On 2022-08-18 09:24 GMT
  • மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த கட்டிடங்களில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது.
  • மாநகராட்சிக்கு நிலுவை வரி பாக்கிகளை உடனே கணினி வரி வசூல் மையத்தில் செலுத்துமாறு ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சியில் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டுக்கு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த கட்டிடங்களில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று தச்சநல்லூர் மண்டலத்தில் உதவி ஆணையாளர் (பொறுப்பு) வெங்கட்ராமன் தலைமையில் உடையார்பட்டி சாலைத்தெருவில் 2 கட்டிடங்கள், நெல்லை மண்டலத்தில் பாண்டியாபுரம் வடக்கு தெருவில் ஒரு கட்டிடத்திலும், திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெருவில் ஒரு கட்டிடத்திலும், தெற்கு மவுண்டு ரோடு பகுதியில் 2 கட்டிடங்கள் என மொத்தம் 6 கட்டிடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

எனவே மாநகராட்சிக்கு நிலுவை வரி பாக்கிகளை உடனே கணினி வரி வசூல் மையத்தில் செலுத்துமாறு ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News