உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் காலையிலேயே ஆர்வமுடன் தேர்வு எழுத வந்த தேர்வர்களையும், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டதையும் படத்தில் காணலாம். (இடம்: தருமபுரி நகர் டான் மெட்ரிக் பள்ளி)

தருமபுரி மாவட்டத்தில் 22 மையங்களில் அரசுப்பணியாளர் தேர்வு

Published On 2022-09-10 09:47 GMT   |   Update On 2022-09-10 09:47 GMT
  • தருமபுரி மாவட்டம் முழுவதும் 22 தேர்வு மையங்களில் நடக்க உள்ள இத்தேர்வில் 6,460 பேர் தேர்வெழுதுகின்றனர்.
  • அனைத்து தேர்வு மையங்களிலும் பஸ்கள் நின்று செல்லவும், சிறப்பு பஸ்கள் இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தருமபுரி,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை-3 பதவிக்கான குரூப்-7 'பி' தேர்வு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள், காலை மற்றும் பிற்பகல் ஆகிய இரண்டு வேளைகளிலும் நடக்கிறது. தருமபுரி மாவட்டம் முழுவதும் 22 தேர்வு மையங்களில் நடக்க உள்ள இத்தேர்வில் 6,460 பேர் தேர்வெழுதுகின்றனர்.

தேர்வு மையங்களில், தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் பஸ்கள் நின்று செல்லவும், சிறப்பு பஸ்கள் இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி டான் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப் பட்டுள்ள மையங்கள் உள்பட 22 மையங்களில் ஏராளமானோர் தேர்வு எழுதினர்.

Tags:    

Similar News