உள்ளூர் செய்திகள்

திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை டெல்லி குழுவினர் ஆய்வு

Published On 2023-02-25 06:03 GMT   |   Update On 2023-02-25 06:03 GMT
  • ஸ்மார்ட் சிட்டி திட்ட முதன்மை செயல் அதிகாரியுடன் காணொலிக்காட்சி மூலமாக ஆய்வுக்கூட்டம் நடந்தது.
  • இடுவாயில் மூங்கில் பூங்கா, சூரியமின்தகடு பூங்கா ஆகியவற் றை ஆய்வு செய்தார்கள்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடிக்கு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தில் எடுக்கப்பட்ட பணிகள், செய்து முடித்த பணிகள், அவற்றின் தரம், நடைபெற்று வரும் பணிகள் குறித்து டெல்லியில் இருந்து ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குனர் சுதிர் சந்திரா ஜனா, ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் ஆகியோர் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்கள்.

மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் முன்னிலை வகித்–தார். மாநகராட்சி பொறியாளர்கள், உதவி ஆணையாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். சென்னையில் இருந்து ஸ்மார்ட் சிட்டி திட்ட முதன்மை செயல் அதிகாரியுடன் காணொலிக்காட்சி மூலமாக ஆய்வுக்கூட்டம் நடந்தது. தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

அதன் பிறகு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், நடந்து வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். திருப்–பூர் மத்திய பஸ் நிலையத்தை ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக நொய்யல் ஆற்றின் இருபுறமும் மேம்படுத்தப்பட்ட பணிகள், கண்கவர் ஓவியங்கள், டவுன்ஹால் கட்டிட பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் இடுவாயில் மூங்கில் பூங்கா, சூரியமின்தகடு பூங்கா ஆகியவற்றை ஆய்வு செய்தார்கள்.

Tags:    

Similar News