உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே காமராஜர் படத்தை சேதப்படுத்திய வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2022-07-13 09:29 GMT   |   Update On 2022-07-13 09:29 GMT
  • களக்காடு அருகே உள்ள கீழதுவரைகுளம் பஸ் நிறுத்தம் அருகே கிராம மக்கள் கட்டிடம் கட்டி அதில் காமராஜர் படத்தை வைத்து பராமரித்து வருகின்றனர்.
  • காமராஜர் படத்தின் முன்பு கிராம மக்கள் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதற்காக வழங்கப்பட்ட கோப்பைகளையும் வைத்திருந்தனர்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழதுவரைகுளம் பஸ் நிறுத்தம் அருகே கிராம மக்கள் கட்டிடம் கட்டி அதில் காமராஜர் படத்தை வைத்து பராமரித்து வருகின்றனர்.

காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் முக்கிய நாட்களில் காமராஜர் படத்திற்கு கிராம மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

காமராஜர் படத்தின் முன்பு கிராம மக்கள் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதற்காக வழங்கப்பட்ட கோப்பைகளையும் வைத்திருந்தனர்.

சம்பவத்தன்று அதே ஊரை சேர்ந்த சுப்பையா மகன் மதியழகன் என்பவர், காமராஜர் படம் வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டை உடைத்து, காமராஜர் படத்தையும் சேதப்படுத்தினார்.

மேலும் கோப்பை களையும் அடித்து நொறு க்கி நாசம் செய்தார். இதுபற்றி அதே ஊரைச் சேர்ந்த சுவிஷேசமுத்து (32) களக்காடு போலீசில் புகார் செய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் ராம நாதன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி மதியழகனை தேடி வரு கின்றனர்.

Tags:    

Similar News