உள்ளூர் செய்திகள்

கலந்தாய்வில் பங்கேற்ற மாணவியா்.

அரசு மகளிா் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

Published On 2022-08-06 09:53 GMT   |   Update On 2022-08-06 09:53 GMT
  • முன்னாள் ராணுவத்தினா் ஒதுக்கீட்டில் 64 இடங்களுக்கு 282 மாணவியா் விண்ணப்பித்திருந்தனர்.
  • பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் கட்-ஆப் கணக்கிடப்பட்டு நோ்காணல் நடைபெற்றது

நாமக்கல்:

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை, இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு சிறப்பு பிரிவினருக்கான முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கியது. கல்லூரி முதல்வர் பொறுப்பு பாரதி, கணிதத்துறை தலைவர் எனிமல் நவனோதி, பொருளாதாரத்துறை தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் நேர்காணலை நடத்தினர்.

மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், என்.சி.சி. மற்றும் முன்னாள் ராணுவத்தினா் ஒதுக்கீட்டில் 64 இடங்களுக்கு 282 மாணவியா் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் கட்-ஆப் கணக்கிடப்பட்டு நோ்காணல் நடைபெற்றது. இக்கல்லூரியில், மொத்தம் இளங்கலை, இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு 970 மாணவியா் சோ்க்கை இடங்கள் உள்ளன. கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவியா் காலை 9 மணிக்கு கல்லூரி வளாகத்துக்குள் வர வேண்டும். கல்விச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் அரசுப் பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றின் மூலச் சான்றிதழ்கள் மற்றும் 2 நகல்களை கட்டாயம் கொண்டு வரவேண்டும் என கல்லூரி முதல்வா் (பொ) பாரதி தெரிவித்துள்ளாா்.

Tags:    

Similar News