உள்ளூர் செய்திகள்

முககவசம் வழங்கப்பட்ட காட்சி.  

வீராசமுத்திரம் பஞ்சாயத்தில் முககவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்

Published On 2022-07-02 09:02 GMT   |   Update On 2022-07-02 09:02 GMT
  • கொரோனா வைரஸ் பரவி வருவதால் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
  • பொதுமக்களுக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டது.

கடையம்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் தமிழக அரசு முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் முக கவசம் அணிவது பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வீராசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜீனத் பர்வீன் யாகூப் வீராசமுத்திரம் கிராம பொது மக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் கூறி முக கவசங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் 3-வது வார்டு உறுப்பினர் ரமேஷா, 6-வது வார்டு உறுப்பினர் பூமணி, 2-வது வார்டு உறுப்பினர் ஜமீலா ஜமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாலிக் நகர்தி.மு.க. கிளை செயலாளர் அகமது இஷாக் கலந்து கொண்டார். ஊராட்சி செயலர் பரமசிவம் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி பணியாளர்கள் அமுதா, நபிஷா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News