உள்ளூர் செய்திகள்

டிரம்ஸ் வாசித்த சிவமணி

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா- கோலாகலமாக நடந்த இந்தியாவின் இதயத்துடிப்பு இசை நிகழ்ச்சி

Published On 2022-08-09 13:07 GMT   |   Update On 2022-08-09 13:07 GMT
  • செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
  • இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் வருகை தந்துள்ளனர்.

சென்னை:

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி கடந்த 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது.

செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் இதில் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-மந்திரிகளின் புகைப்படம் இடம்பெற்றுள்ளன.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவில் கியூபிக் நிறங்களை ஒன்று சேர்த்து சிறுவர்கள் அசத்தினர்.

இந்நிலையில், இந்தியாவின் இதயத் துடிப்பு (ஹார்ட் பீட்ஸ் ஆஃப் இந்தியா) என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் டிரம்ஸ் சிவமணி, வீணை ராஜேஷ் வைத்யா, நவீன்குமார், கீ போர்டு ஸ்டீபன் தேவசிஆகியோர் சேர்ந்து ஒரே மேடையில் அசத்தினர்.

Tags:    

Similar News