உள்ளூர் செய்திகள்

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

களக்காட்டில் ஸ்தோத்திர பண்டிகை -தேசிய கொடியுடன் கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

Published On 2022-09-03 09:22 GMT   |   Update On 2022-09-03 09:22 GMT
  • களக்காடு சி.எஸ்.ஐ.கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும் ஸ்தோத்திர பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
  • இந்தியாவின் ஒற்றுமையை விளக்கும் வகையில் சிறுவர், சிறுமியர் அனைத்து மாநில உடை அணிந்து சென்றது பொதுமக்களை கவர்வதாக இருந்தது.

களக்காடு:

களக்காடு சி.எஸ்.ஐ.கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும் ஸ்தோத்திர பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டுக்கான ஸ்தோத்திர பண்டிகை நேற்று தொடங்கியது.

இதையொட்டி கிறிஸ்தவர்களின் ஊர்வலம் நடந்தது.

சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் தொடங்கிய ஊர்வலம், களக்காடு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தை சேகர குரு சந்திரகுமார் தொடங்கி வைத்தார்.

சபை ஊழியர் சுஜின் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் இந்திய சுதந்திர தின விழாவின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏந்தி சென்றனர்.

மேலும் அனைவரும் கைகளில் காவி, வெள்ளை பச்சை வண்ண கொடிகளையும் பிடித்து சென்றனர். அத்துடன் இந்தியாவின் ஒற்றுமையை விளக்கும் வகையில் சிறுவர், சிறுமியர் அனைத்து மாநில உடை அணிந்து சென்றது பொதுமக்களை கவர்வதாக இருந்தது. இதில் களக்காடு, தோப்பூர், சிதம்பரபுரம், புதூர், ராமகிருஷ்ணாபுரம், கோவில்பத்து உள்பட 8 சபைகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

அவர்கள் இந்தியாவை நேசிப்போம், இந்தியா மத சார்பற்ற, மத சுதந்திர நாடு போன்ற வாசகங்கள் அடங்கிய பாததைகளையும் ஏந்தி சென்றனர்.

ஊர்வலம் கிறிஸ்தவ ஆலயத்தை அடைந்ததும் கொடி ஏற்றப்பட்டது. ஸ்தோத்திர பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை தொடர்ந்து நடக்கிறது.

Tags:    

Similar News