உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள். 

உடன்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

Published On 2022-06-30 09:23 GMT   |   Update On 2022-06-30 09:23 GMT
  • குழந்தைகள் பாதுகாப்பு எண்கள் 1908, விழிப்புணர்வு பதாகைகள் ஆகியவை குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் செல்வி பிளாரன்ஸ் பேசினார்.
  • பேரூராட்சி, மஸ்தூர் பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உடன்குடி:

உடன்குடி பேரூராட்சியில் குழுந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி தலைமை தாங்கினார்.பேரூராட்சி செயல் ஆலுவலர் பாபு முன்னிலை வகித்தார். குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது, உறவினர்கள், பக்கத்து வீட்டார், பள்ளி வாகனம் ஓட்டுபவர்கள் உள்ளிட்டவர்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்கள், அதனைத் தவிர்க்கும் முறை, குழந்தைகள் பாதுகாப்பு எண்கள் 1908,விழிப்புணர்வு பதாகைகள் ஆகியவை குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் செல்வி பிளாரன்ஸ் பேசினார்.இதில் பேரூராட்சி, மஸ்தூர் பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News