உள்ளூர் செய்திகள்

குழந்தை தொழிலாளர் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும்- கோரிக்கை மனு

Update: 2022-06-28 09:34 GMT
  • சத்துணவு திட்டத்தில் 5 முதல் 25 ஆண்டுகள் வரை பணிபுரிந்து வருகிறார்கள்.
  • 2010-ம் ஆண்டு முதல் பணி அனுபவம் உள்ளதால் சத்துணவு திட்டத்தில் பணி வழங்கிட வேண்டும்/

தருமபுரி,

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தில் பணியாற்றிவரும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பணியாளர்கள், நிரந்தர மாற்றுப்பணி வழங்க கோரி நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மனுவில் தெரிவித்துள்ளதாவது:- தருமபுரி மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளர் திட்டமானது, கடந்த 1996 ம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்றுவரை 26 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின்கீழ் எழுத்தர், மற்றும் ஆவண காப்பாளர், கல்வி பயிற்றுநர்கள், தொழில்கல்வி பயிற்றுனர்கள், மற்றும் மைய உதவியாளர்கள், என மொத்தம் 46 பேர், மற்றும் திட்ட அலுவலக பணியாளர்கள் 6 பேர் என மொத்தம் 52 பேர் பணிபுரிந்து வருகிறோம். ஒவ்வொருவரும் குறைந்தது 5 முதல் 25 ஆண்டுகள் வரை பணிபுரிந்து வருகிறோம், இத்திட்டம் தற்போது 2022 - 2023-ம் ஆண்டு எஸ்.எஸ்.ஏ.வின் கீழ் மாற்றம் செய்யப்பட உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். ஆகையால் திட்டப் பணியாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தை தற்போது வேறு திட்டத்துடன் இணைப்பதால் எங்களின் பணி கேள்விக்குறியாக உள்ளது.

அதனால் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கல்வி அனுபவம் உள்ளதால்திஎஸ்.எஸ்.ஏ.ட்டத்தில் பணி வழங்கிட வேண்டும், அல்லது சத்துணவு திட்டத்தில் 2010-ம் ஆண்டு முதல் பணி அனுபவம் உள்ளதால் சத்துணவு திட்டத்தில் பணி வழங்கிட வேண்டும்,

அல்லது தொழிலாளர் நல வாரியத்தில் பணி அனுபவம் உள்ளதால் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பணி வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Similar News