உள்ளூர் செய்திகள்

முகாமில் ரத்ததானம் செய்தவர்களை படத்தில் காணலாம்.

தாடிக்கொம்புவில் ரத்ததான முகாம்

Published On 2022-09-17 07:51 GMT   |   Update On 2022-09-17 07:51 GMT
  • தாடிக்கொம்புவில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
  • இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

தாடிக்கொம்பு:

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட இளைஞரணி சார்பாக ரத்ததான முகாம் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் மண்டபத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் வக்கீல் அன்பு ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட பொருளாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் தனபாலன், ஒன்றிய தலைவர் வீரகுமார் கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்ட துணைத் தலைவர் கணேஷ் பாலாஜி, மாவட்ட செயலாளர் தன்ராஜ், கண்ணன், சின்னமணி மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ரத்ததான முகாமில் 150 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

Tags:    

Similar News