உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் பேசிய காட்சி.


சாத்தான்குளம் அருகே பா.ஜனதா செயற்குழு கூட்டம்

Published On 2022-07-25 08:59 GMT   |   Update On 2022-07-25 08:59 GMT
  • திருச்செந்தூருக்கு வருகை தரும் மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்க அதிக வாகனங்களுடன் செல்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  • தீர்மானங்களை ஒன்றிய செயலாளர் சுபா வெங்கட் வாசித்தார்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் ஒன்றிய பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள காந்திநகரில் நடந்தது.

இந்த கூட்டத்தில் ஒன்றிய தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். அகத்தீஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட துணை அமைப்பாளர் ராம் மோகன் உள்ளிட்டோர் பேசினார்கள்.

கூட்டத்தில் திருச்செந்தூருக்கு வருகை தரும் மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்க அதிக வாகனங்களுடன் செல்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்களை ஒன்றிய செயலாளர் சுபா வெங்கட் வாசித்தார். மாவட்ட பிரசார பிரிவு துணைத் தலைவர் சுராஜ் ராஜா, மாவட்ட செயலாளர் ராஜ புனிதா, நகர தலைவர் ஜோசப் ஜெபராஜ், ஒன்றிய வழக்கறிஞர் பிரிவு தலைவர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞர் அணி துணைத் தலைவர் சண்முகராஜா நன்றி கூறினார்.

Tags:    

Similar News