உள்ளூர் செய்திகள்

தேனாடு கிராமத்தில் பல்லுயிர் பாதுகாப்பு முகாம்

Published On 2023-09-17 09:45 GMT   |   Update On 2023-09-17 09:45 GMT
  • நீலகிரி மாவட்டம் தேனாடு கிராமத்தில் வனத்துறை சார்பில் மனிதன்-வன உயிரின மோதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
  • முகாமில் பொதுமக்கள். மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரவேணு,

நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி வனச்சரகத்துக்கு உட்பட்ட தேனாடு கிராமத்தில் வனத்துறை சார்பில் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் மனிதன்-வன உயிரின மோதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. கீழ் கோத்தகிரி வனச்சரக அலுவலர் ராம்பிரகாஷ் தலைமைதாங்கினார்.

அப்போது வனஉயிரின மோதல் குறித்த விழிப்புணர்வும் கலந்துரையாடலும் நடத்தப்பட்டது. பொதுமக்களின் சந்தேகத்திற்கு அதிகாரிகள் பதிலளித்தனர். விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சோலை மரநாற்றுகள் வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு முகாமில் தேனாடு, கோக்கால், மெட்டுக்கல் கிராம பொதுமக்கள் மற்றும் தேனாடு அரசு ஆரம்ப பள்ளி மாணவர்கள், மெட்டுக்கல் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News