உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி மார்க்கெட்டில் வாழைத்தார் விற்பனை ஜோர்

Published On 2022-09-05 09:27 GMT   |   Update On 2022-09-05 09:27 GMT
  • அனைத்து ரக வாழைத்தார்க–ளுக்கும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
  • விஷேச நாட்களையட்டி கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் வாரத்தில் 2 நாட்கள் வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனை வாங்குவதற்காக கேரள, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.

அவ்வப்போது பருவமழையால், வெளி மாவட்டங்களில் இருந்து குறைவான எண்ணிக்கையிலேயே வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.

கடந்த மாதம் துவக்கத்தில் வரத்து குறைவாக இருந்தாலும், முகூர்த்த நாட்கள் இல்லாததால் வாழைத்தார் விற்பனை மந்தமாக இருந்துள்ளதுடன், குறைவான விலைக்கு விற்பனையானது.

தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை விழா களைகட்ட தொடங்கியுள்ளது. இதனால் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து வாழைத்தார் வாங்கி செல்கிறார்கள். இதனால் விலையும் கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது.

கடந்த வாரத்திலிருந்து முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து இருந்ததால், அனைத்து ரக வாழைத்தார்க–ளுக்கும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று நடந்த ஏலத்தின்போது, சுற்று–வட்டார பகுதியிலிருந்து சுமார் 1900 க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.

8-ந் தேதி ஓணம் பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து தொடர்ந்து வருவதால் அனைத்துரக வாழைத்தார்களும் கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையானது.

இதில்செவ்வாழைத்தார் ரூ.55க்கும், பூவந்தார் ரூ.40க்கும், சாம்ராணி ரூ.40க்கும், மோரீஸ் ரூ.40க்கும், ரஸ்தாளி ரூ.45க்கும், நேந்திரன் ஒருகிலோ ரூ.45க்கும், கேரள ரஸ்தாளி ஒருகிலோ ரூ.50க்கும் என, கூடுதல் விலைக்கு விற்பனையானது.

அதுபோல்ல, நேற்று தேர்நிலையில் உள்ள மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்ட வாழை இலைகட்டுகள், தொடர்ந்து விஷேச நாட்களையட்டி கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News