உள்ளூர் செய்திகள்

கும்பகோணத்தில், அரசு ஊழியர் மீது தாக்குதல்

Published On 2023-06-18 09:54 GMT   |   Update On 2023-06-18 09:54 GMT
  • குறுவை சாகுபடிக்காக தண்ணீர் வருவதையொட்டி மரத்தை அகற்ற வேண்டும்.
  • மரத்தை அகற்றக்கூடாது எனக்கூறி தகராறு செய்து குமாரை தாக்கியுள்ளனர்.

கும்பகோணம்:

கும்பகோணத்தில், சாக்கோட்டை, அனுமார் கோயில் தெருவை சேர்ந்தவர் குமார் (58). இவர் சாக்கோட்டை உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பாசன உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்தாண்டு சாக்கோட்டை அரசலாற்றின் கரையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் 35 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூங்குமூஞ்சி மரம் கீழே விழுந்து இருந்தது. இந்நிலையில், தற்போது குறுவை சாகுபடிக்காக தண்ணீர் வருவதையொட்டி அந்த மரத்தை அகற்ற வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி உத்தரவிட்டதையடுத்து, அரசு ஊழியரான குமார், சில தொழிலாளர்களைக் கொண்டு அந்த மரத்தை அகற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சிலர் இந்த மரத்தை அகற்றக்கூடாது என கூறி தகராறு செய்து, குமாரை தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த குமார் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து நாச்சியார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு அலுவலகத்தில் உள்ளே புகுந்து அரசு அலுவலரே தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags:    

Similar News