உள்ளூர் செய்திகள்

கும்பகோணத்தில், ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-19 10:09 GMT   |   Update On 2023-07-19 10:09 GMT
  • பணியாற்றும் அனைவரையும் உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
  • புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

கும்பகோணம்:

கும்பகோணத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் சார்பில் மாநிலச் செயலாளர் தில்லைவனம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்பாட்ட த்தில் உள்ளாட்சி தொழிலாளர் குறைதீர் ஆணையம் அமைக்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்களில் அவுட்சோர்சிங், தினக்கூலி மற்றும் சுய உதவிக் குழு முறைகளை ரத்து செய்து, பணியாற்றும் அனைவரையும் உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தூய்மை பணியாள ர்களுக்கு வாரம் ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் நிரந்தர வேலை மற்றும் காலம் முறை ஊதியத்தை பறிக்கும் அனைத்து தொழிலாளர் விரோத அரசாணை களையும் உடனே ரத்து செய்ய வேண்டும்.

கும்பகோணம் மாநகராட்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர் அனைவரையும் உடனே பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.

துப்புரவு பணியா ளர்களுக்கு மாதாந்திர சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதிக்குள் வழங்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்பாட்டத்தில் ஏஐடி யூசி உள்ளாட்சி துறை பணியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News