search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pension"

    • ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று வழங்க வேண்டும்.
    • 15-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி புதிய சம்பளம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு போக்குவரத்துக் கழகங்கள் தனது சேவையில் 50 ஆண்டுகால பொன்விழாவை கண்டுள்ளது.

    போக்குவரத்து தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்று சுமார் 90 ஆயிரம் பேர் உள்ளனர்.

    இவர்களுக்கு அரசு பொறுப்பேற்று வழங்கும் ஓய்வூதியம் கிடையாது. பிஎப் டிரஸ்ட் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியத்தை தான் பெற்று வருகின்றனர்.

    இவர்களின் ஓய்வூதியத்தை அரசே பொறுப்பே ற்று வழங்க வேண்டும்.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15- வது ஊதிய ஒப்ப ந்தம் குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி புதிய சம்பளம் வழங்க வேண்டும்.

    ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வியாழக்கிழமை) மாநிலந்தழுவிய தொடர் முழக்க போராட்டம் திருச்சி போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு நடைபெறுகிறது.

    இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட கும்பகோணம், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, நாகப்பட்டினம் ஆகிய கழகங்களில் பணிபுரிந்து வரும் அனைத்து தொழிலாளர்களும், ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அன்பழகன், சரவணன் மற்றும் சி.முத்துசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் ரமேஷ் , சரவணன், கணே சன், செந்தில்குமார் , செல்வ ம் , ரவிச்சந்திரன், பாலசு ப்ரமணியன், சித்ரா, வளர்மாலா, ராணி , அந்துவன்சேரல்ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில உயர்ம ட்டக்குழு முடிவின்படி, புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் , சரண் விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்கிட வேண்டும்,

    உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள காலிப் பணியி டங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், 2002 முதல் 2004 தொகுப்புஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பணிக்காலத்தை வரண்முறைசெய்திட வேண்டும் என்பது உள்ளி ட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி 1.11.23 அன்று நாகப்பட்டினம் அவுரி த்திடலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்து வது என்று முடிவெ டுக்க ப்பட்டது. முடிவில் சத்து ணவு ஊழியர் சங்க மாவ ட்டச் செயலாளர் அருளே ந்திரன் நன்றி கூறினார்.

    • அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரயில் நிலையம் முன்பு இன்று தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    நிர்வாகிகள் உமா, லோகநாதன் ஜீவா, வீராச்சாமி, சோமு, அன்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் குமாரவேல், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் மாநில செயற்குழு சோமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் கள வாக்குறுதி படி முறையான காலமுறை ஊதியம், முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் நிர்வாகிகள் அன்பழகன், லூர்து சாமி, ஜார்ஜ் ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    • தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    திருமருகலில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு திருமருகல் ஒன்றிய தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், தலைவர் குமார், பொருளாளர் திருவருட்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக மாவட்ட மகளிர் அணி நிர்வாகி ஜெயலட்சுமி வரவேற்றார்.

    மாநில தலைமை நிலை செயலர் ரமேஷ் கொள்கைகளை விளக்கி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை சரி செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.21 ஆயிரமாக வழங்க வேண்டும்.
    • பழைய, புதிய அகவிலைப்படி உயர்வுகள் ஓய்வூதியத்துடன் இணைத்து உயர்த்தி வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு கும்பகோணம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனரிடம் ஏ.ஐ.டி.யூ.சி நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ. 21ஆயிரமாக வழங்க வேண்டும். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 15 -வது ஊதிய ஒப்பந்தத்தில் அரசு ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்களுக்கு இணையாக தற்போது தொழிலாளர்கள் பெற்று வரும் அடிப்படைச் சம்பளத்தில் 25 சதவீத உயர்வு அளித்து, அடிப்படைச் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

    தொழிலாளர்களின் பணி நேரங்கள் சட்டப்படி வரைமுறை செய்ய வேண்டும். அரசு போக்குவரத்து கழகங்களுக்கு டோல்கேட் சுங்கவரி, டீசல் , இருகைவரி, வாகன வரிகள் ரத்து செய்ய வேண்டும். பழைய, புதிய அகவிலைப்படி உயர்வுகள் ஓய்வூதியத்துடன் இணைத்து உயர்த்தி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    இந்த நிகழ்வில் மாநிலச் செயலாளர் தில்லைவனம், மாநில துணைதலைவர் துரை.மதிவாணன், கும்பகோணம் கழக பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன், மாநில குழு உறுப்பினர் கஸ்தூரி, பொருளாளர் ராஜா மன்னன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
    • சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவை வழங்க வேண்டும்.

    கும்பகோணம்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட துணை தலைவர் ராமநாதன் தலைமையில் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், மாநில துணை தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் அய்யப்பன், மாவட்ட துணை தலைவர் பாலசுப்பிரமணியன், வட்ட தலைவர் முருகையன், முகம்மது ஜாக்கீர், வட்ட துணை தலைவர் கீதா, வட்ட செயலாளர் சந்தானம், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும் ஓய்வூதியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
    • சிறப்பு ஓய்வூதிய பெறும் அனைவரையும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 7-வது மாவட்ட பேரவை கூட்டம் திருப்பூர் மங்கலம் பாதை கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட தலைவர் சண்முகம் கொடியேற்றினார். துணை தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் குணசேகரன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில துணை தலைவர் அரங்கநாதன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் செயலாளர் அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் நிசார் அகமது, திருப்பூர் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் மணியன், ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் நாட்ராயன், ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் ரீட்டா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர், ஊர்புற நூலகர் போன்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கமுடேசன் பிடித்த காலத்தை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், சிறப்பு ஓய்வூதிய பெறும் அனைவரையும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும்.
    • ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

    துணைத் தலைவர் ஜெயக்குமார் நகரத் துணைத் தலைவர் சாரங்கபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வட்ட செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் ஊர் புற நூலகர்கள் வனத்துறை காவலர்கள் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பபட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பழனிவேலு, வட்டச் செயலாளர் பிரேம்சந்திரன், இணைச்செயலாளர் வேம்பு, செயற்குழு உறுப்பினர் குருராஜன், வட்டத் தலைவர் நடராஜன், பொருளாளர் கௌசல்யா சேகர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பொருளாளர் அன்பழகன் நன்றி கூறினார்.

    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
    • அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

    தஞ்சாவூர்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

    அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்.

    சத்துணவு ஊழியர்கள், அங்க ன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி இயக்கு னர்கள், எம். ஆர் .பி. செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    மாவட்டத் துணைத் தலைவர்கள் தமிழ்வாணன், ரவிச்சந்திரன், முருகன், கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு ஆரம்பம் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்த லைவர் ரவிச்சந்திரன் பேரணியை தொடக்கி வைத்தார்.

    மாவட்டச் செயலாளர் ரங்கசாமி கோரிக்கை குறித்து விளக்க உரையாற்றினார்.

    இந்த பேரணியானது பனகல் கட்டிடத்தில் முடிவடைந்தது.

    இதில் மாநில செயலாளர் ஹேமலதா நிறைவுரை ஆற்றினார்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

    இதில் ஏராளமான நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
    • கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகில் கல்லுடைக்கும் மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ) சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் அன்புமணவாளன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் ரெத்தினவேல் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற வழிகாட்டுதல் படியும், நலவாரிய கூட்ட முடிவின்படியும் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பணப்பலன்கள் கிடைக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். நிலுவை மனுக்களுக்கு உடனடியாக பணப்பலன்களை வழங்க வேண்டும். பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 1-ம் வகுப்பு முதல் கல்வி நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • 70 வயது அடைந்த அனைத்து ஓய்வுதிகளுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தஞ்சை பனங்க கட்டிடம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

    பேராட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.மாவட்டத் துணைத் தலைவர் பால்ராஜ் வரவேற்றார். துணைத்த லைவர் பூபதி மாவட்ட இணைச்செ யலாளர்கள் வெங்கடேசன், பாலசுப்ர மணியன், பிச்சை முத்து, மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம் தணிக்கையாளர்கள் சமுத்திரக்கனி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில் 70 வயது அடைந்த அனைத்து ஓய்வுதிகளுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்,

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுகளை திட்டத்தை வழங்க வேண்டும்,

    மருத்துவ காப்பீடு திட்டத்தில் செலவுத்தொகை வழங்காமல் நிலுவையில் இருக்கும் அனைத்து மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுத்து செலவுத்தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்த பட்டது.

    நிகழ்ச்சியில் குருசாமி, ரங்கசாமி, தங்கராசு, ரவிச்சந்திரன் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன் மாவட்ட பொருளாளர் கோவிந்தராசு மற்றும் 150 க்கு மேற்பட்ட ஓய்வூதிய சங்கத்தினர் பங்கு பெற்றனர்.

    • பணியாற்றும் அனைவரையும் உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
    • புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் சார்பில் மாநிலச் செயலாளர் தில்லைவனம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்பாட்ட த்தில் உள்ளாட்சி தொழிலாளர் குறைதீர் ஆணையம் அமைக்க வேண்டும்.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்களில் அவுட்சோர்சிங், தினக்கூலி மற்றும் சுய உதவிக் குழு முறைகளை ரத்து செய்து, பணியாற்றும் அனைவரையும் உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    தூய்மை பணியாள ர்களுக்கு வாரம் ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும்.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் நிரந்தர வேலை மற்றும் காலம் முறை ஊதியத்தை பறிக்கும் அனைத்து தொழிலாளர் விரோத அரசாணை களையும் உடனே ரத்து செய்ய வேண்டும்.

    கும்பகோணம் மாநகராட்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர் அனைவரையும் உடனே பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

    தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.

    துப்புரவு பணியா ளர்களுக்கு மாதாந்திர சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதிக்குள் வழங்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    ஆர்பாட்டத்தில் ஏஐடி யூசி உள்ளாட்சி துறை பணியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×