உள்ளூர் செய்திகள்

அம்பு விடுதல் நிகழ்ச்சி நடந்தது.

சாட்சிநாதர் கோவிலில் அம்பு விடுதல் நிகழ்ச்சி

Published On 2022-10-06 09:56 GMT   |   Update On 2022-10-06 09:56 GMT
  • 40 ஆண்டுகளாக அம்பு விடுதல் திருவிழா நடைபெறாமல் இருந்தது.
  • முருகப்பெருமானை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அம்பு விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுவாமிமலை:

சுவாமிமலை அருகே திருப்புறம்பயத்தில் சாட்சிநாதர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் நவராத்திரி விழா கடந்த 26-ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது.

விழாவின் பத்தாம் நாளில் சுவாமி சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் வீதியுலா சென்று அம்பு விடுதல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

கடந்த 40 ஆண்டுகளாக அம்பு விடுதல் திருவிழா நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், மதுரை ஆதீனம் 293-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நடப்பாண்டு அம்பு விடுதல் திருவிழாவை சிறப்பாக நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி, கோவில் கண்காணிப்பாளர்கள் முத்தையன், சுப்பிர மணியன், பழனியப்பாபிள்ளை, செங்குட்டுவன் மற்றும் பொதுமக்கள் இணைந்து அம்பு விடுதல் நிகழ்ச்சியை நேற்று வெகு விமர்சையாக நடத்தினர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல், அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான நேற்று அம்பு விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமான் வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அம்பு விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News