உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து மேலாண் இயக்குனரிடம் மனு அளிக்க வந்த ஏ.ஐ.டி.யூ.சி நிர்வாகிகள்.

கும்பகோணம் மேலாண் இயக்குநரிடம், ஏ.ஐ.டி.யூ.சி கோரிக்கை மனு

Published On 2023-08-25 10:17 GMT   |   Update On 2023-08-25 10:17 GMT
  • போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.21 ஆயிரமாக வழங்க வேண்டும்.
  • பழைய, புதிய அகவிலைப்படி உயர்வுகள் ஓய்வூதியத்துடன் இணைத்து உயர்த்தி வழங்க வேண்டும்.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு அரசு கும்பகோணம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனரிடம் ஏ.ஐ.டி.யூ.சி நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ. 21ஆயிரமாக வழங்க வேண்டும். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 15 -வது ஊதிய ஒப்பந்தத்தில் அரசு ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்களுக்கு இணையாக தற்போது தொழிலாளர்கள் பெற்று வரும் அடிப்படைச் சம்பளத்தில் 25 சதவீத உயர்வு அளித்து, அடிப்படைச் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

தொழிலாளர்களின் பணி நேரங்கள் சட்டப்படி வரைமுறை செய்ய வேண்டும். அரசு போக்குவரத்து கழகங்களுக்கு டோல்கேட் சுங்கவரி, டீசல் , இருகைவரி, வாகன வரிகள் ரத்து செய்ய வேண்டும். பழைய, புதிய அகவிலைப்படி உயர்வுகள் ஓய்வூதியத்துடன் இணைத்து உயர்த்தி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

இந்த நிகழ்வில் மாநிலச் செயலாளர் தில்லைவனம், மாநில துணைதலைவர் துரை.மதிவாணன், கும்பகோணம் கழக பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன், மாநில குழு உறுப்பினர் கஸ்தூரி, பொருளாளர் ராஜா மன்னன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News