உள்ளூர் செய்திகள்

நானோ யூரியா உபயோகித்து கூடுதல் மகசூல் பெறலாம் வேளாண் அதிகாரி அறிக்கை

Published On 2022-09-09 10:21 GMT   |   Update On 2022-09-09 10:21 GMT
  • பயிர்களுக்குத் தேவையான பேரூட்டச்சத்துக்களில் முக்கியமானது தழைச்சத்து ஆகும்.
  • இவைகளில் குருணை வடிவ யூரியாவே மிக அதிகளவில் உபயோகிக்கும் தழைச்சத்து உரமாகும்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்

பதாவது :-

பயிர்களுக்குத் தேவையான பேரூட்டச்சத்துக்களில் முக்கியமானது தழைச்சத்து ஆகும். இதனை பொதுவாக யூரியா அல்லது அமோனியாக்கல் வகை உரங்கள் மூலம் பயிர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இவைகளில் குருணை வடிவ யூரியாவே மிக அதிகளவில் உபயோகிக்கும் தழைச்சத்து உரமாகும்.

இதில் 46 சதவீதம் தழைச்சத்தான நைட்ஜன் உள்ளது. நாம் அதிகளவு செயற்கை உரங்களை பயன்படுத்துவதால் மண்வளம் பாதிப்படைவதோடு, சுற்றுச்சூழல் மாசுபட்டு, உற்பத்தியாகும் உணவுப்பொருளில் நச்சுத்தன்மையும் அதிகரிக்கின்றது. ஆகவே விவசாயிகளுக்கு மிகக்குறைந்த விலையில் சென்றடைய வேண்டி இந்திய உழவர் உரக் கூட்டுறவு நிறுவனம் (இப்கோ) திரவ வடிவில் நானோ யூரியாவினை விற்பனை செய்து வருகின்றது.

நானோ யூரியாவானது பயிர்களின் 2 முக்கிய வளர்ச்சி நிலைகளில் இலைவழியாக தெளிப்பதற்கு ஏற்றது. இதன் மிக நுண்ணிய துகள்களானது இலைகளில் உள்ள துவாரங்கள் மற்றும் பிறதிறப்புகளின் வழியாக பயிர்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் நேரடியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இதன் மூலம் தழைச்சத்து பயன்படுத்தாத இலைகளின் வெற்றிடத்தில் சேமிக்கப்பட்டு பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான போது மெதுவாக தழைச்சத்து கிடைக்கச் செய்கிறது. மேலும் 500 மி.லிட்டர் கொண்ட ஒரு நானோ யூரியா பாட்டிலானது 45 கிலோ எடை உள்ள குருணை வடிவ யூரியா மூட்டைக்கு சம்மானதாகும். ஏக்கருக்கு தேவையான 500 மி.லிட்டர் நானோ நைட்ரஜனை 125 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிரின் இலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.

1-ம் தெளிப்பு பயிர் வளர்ச்சிப் பருவம் 30-35 நாட்களில் அல்லது கிளைக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும். 2-ம் தெளிப்பு பூக்கும் பருவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவோ அல்லது முதல் தெளிப்பிலிருந்து 20-25 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

இவ்வாஅறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News