உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலில் பிடிபட்ட போதை காளானை படத்தில் காணலாம்.

கொடைக்கானலில் மீண்டும் அதிகரித்து வரும் போதைக் காளான் விற்பனை

Published On 2022-06-28 05:02 GMT   |   Update On 2022-06-28 05:02 GMT
  • கொடைக்கானல் காடுகளில் இயற்கையாகவே வளரக்கூடிய ஒரு வகையான காளான் தான் போதை காளான்.
  • தற்போது கோடைகாளான் என்ற பெயரில் போலி போதை காளான்களை விற்று மோசடி செய்து வருகிறார்கள்.

கொடைக்கானல்:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இயற்கை சார்ந்த வனப்பகுதியாகும். இங்கு பல்வேறு தாவரங்களும் மற்றும் அரிய வகை செடிகள் வளர்வது அரிதான ஒன்றாக இருக்கக் கூடிய நிலையில் காடுகளில் இயற்கையாகவே வளரக்கூடிய ஒரு வகையான காளான் தான் போதை காளான்.

1000 -க்கும் மேற்பட்ட காளான் வகைகள் இருக்கக் கூடிய நிலையில் கொடைக்கானலிலும் ஏராளமான காளான் வகைகள் உள்ளன.

பொதுவாக காளான்களை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. மற்றும் காளான்கள் சாப்பிட்டால் நற்பயன்கள் ஏற்படும் என்ற நிலையில் தற்போது சைலோ சைபின் என்ற ரசாயனம் கொண்டு இருப்பதுதான் இந்த போதை காளான்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மிகப்பெரிய அளவில் போதை காளான் விற்பனையாகி வந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த போதை காளான் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து வரக்கூடிய இளைஞர்களை குறிவைத்து நூதனமாக இந்த விற்பனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக வெளி மாநில நபர்களுக்கு இணையதளம் மூலம் செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டு அந்த செல்போன் எண்ணை கொண்டு தொடர்பு கொண்டால் போதை காளான் கிடைத்து வருகிறது.

போதை காளானை உட்கொள்வதே தவறு என்ற நிலையில் தற்போது கோடைகாளான் என்ற பெயரில் போலி போதை காளான்களை விற்று மோசடி செய்து வருகிறார்கள். அவ்வப்போது போதை காளான்கள் புகாரின் பேரில் பிடிபட்டாலும் அவற்றுக்கு கஞ்சா வழக்கே பதியப்பட்டு அவர்களுக்கு சிறை தண்டனை அளிக்கப்படுகிறது.

போதைக்காளான் வைத்திருப்பவர்களுக்கு தனி சட்டம் இயற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை இருந்துவரும் நிலையில் தற்போது வரை அதற்கான நடவடிக்கை ஏதும் இல்லாமல் தான் உள்ளது. எனவே சீரழிந்து வரும் சமுதாயத்தை ஒழிக்க விழிப்புணர்வு அவசியம் ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News