உள்ளூர் செய்திகள்

மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் ஜெயேந்திரன் மணி, முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன் ஆகியோர் பாராட்டி கோப்பை வழங்கிய காட்சி.

10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வில் பாளை ஜெயேந்திரா பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-06-22 09:19 GMT   |   Update On 2022-06-22 09:19 GMT
  • பிளஸ்-2 பொதுத்தேர்வினை 329 மாணவ, மாணவிகள் எழுதினர்
  • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 270 மாணவ- மாணவிகள் எழுதினர்.

நெல்லை:

பாளை மகாராஜநகர் ஸ்ரீஜெயேந்திரா சுவாமிகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை 329 மாணவ, மாணவிகள் எழுதினர்.

இதில் மாணவி மதுஸ்ரீ 595 மதிப்பெண்களும், ஜனனி 594 மதிப்பெண்களும், ஹரிஹர சுதன், பத்மா, சாரதா, வினோலின் ரத்னா ஆகிய 4 ேபரும் 591 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

கணிதத்தில் 13 பேரும், இயற்பியலில் 5 பேரும், வேதியியலில் 21 பேரும், உயிரியலில் 12 பேரும், கணினி அறிவியலில் 3 பேரும், வணிகவியலில் 12 பேரும், வணிக கணிதத்தில் 10 பேரும், கணக்குப்பதிவியலில் 10 பேரும், பொருளியலில் 4 பேரும் 100-க்கு 100 பெற்றனர்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 270 மாணவ- மாணவிகள் எழுதினர். அதில் மாணவி ஸ்ரீசாரதாதேவி 493 மதிப்பெண்களும், ராகவி துர்கா 492 மதிப்பெண்களும், ஜெயசிரஞ்சீவி, ரிதிவேதா ஆகிய 2 பேரும் 489 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். கணிதத்தில் 13 பேரும், அறிவியிலில் 4 பேரும், சமூக அறிவியலில் 1 நபரும் 100-க்கு 100 பெற்றனர்.

சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் ஜெயேந்திரன் மணி, முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News