உள்ளூர் செய்திகள்

சேலத்தில் நாளை போலீஸ் எழுத்து தேர்வு 962 பேர் எழுதுகின்றனர்

Published On 2022-11-26 09:20 GMT   |   Update On 2022-11-26 09:20 GMT
  • தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம், காவல்துறையில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பு வீரர், சிறைக்கா வலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை நடத்துகிறது.
  • சேலம் மாவட்டத்தில் 19,532 ஆண்கள், 1430 பெண்கள் என 22 மையங்களில் 20,962 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.

சேலம்:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம், காவல்துறையில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பு வீரர், சிறைக்கா வலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை நடத்துகிறது. சேலம் மாவட்டத்தில் 19,532 ஆண்கள், 1430 பெண்கள் என 22 மையங்களில் 20,962 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.

இந்த எழுத்து தேர்வில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோதா கூறியுள்ளதாவது: -

நாளை காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 10 மணிக்கு மேல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக் கூட அனுமதிச் சீட்டினை கொண்டு வராதவர்கள் மையத்திற்குள் அனும திக்கப்பட மாட்டார்கள். அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாத விண்ணப்ப தார்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணைய தளத்தில் (www.tnusrb.tn.gov.in) இருந்து அழைப்பு கடித நகலை பதிவிறக்கம் செய்து, தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். தேர்வுக் கூட நுழைவு சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படங்கள் இல்லா மல் இருந்தாலோ அல்லது தெளிவாக இல்லாமல் இருந்தாலோ விண்ணப்பதாரர் தங்களது புகைப்படத்தினை ஒட்டி அல்லது பி பிரிவு அதிகாரியிடம் சான்று

ஒப்பம் பெற்று வரவேண்டும்.

விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையான ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசலை கொண்டு வர வேண்டும். செல்போன், எலக்ட்ரானிக் வாட்ச், கால்குலேட்டர் மற்றும் எந்தவித எலக்ட்ரானிக் உப கரணங்களும் அறைக்குள் எடுத்து வரக்கூடாது. கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனாகொண்டு வரவேண்டும். வேறு எந்த வித சொந்த உடமைகளை கொண்டு வர கூடாது. 22 தேர்வு மையங்களிலும் வீடியோ கேமராக்கள் மூலம் ஒளிப்பதிவு செய்து தேர்வு கண்காணிக்கப்படும்.

இவ்வாறு போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News