உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

திண்டுக்கல்லில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கிய ரவுடிகள் கைது

Published On 2022-10-15 08:08 GMT   |   Update On 2022-10-15 08:08 GMT
  • திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார்.
  • ரோந்து பணியின் போது கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மோட்டார் சைக்கிள், அரிவாள்,கத்தி, இரும்பு பைப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார்.

அதன்படி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள முட்புதரில் சந்தேகப்படும் வகையில் 5 பேர் பதுங்கி இருந்ததைக் கண்டு அவர்களை பிடிக்க சென்றனர்.

போலீசார் வருவதைப் பார்த்த 5 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். உடனே போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் மாலப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரன் (26), கார்த்திகேயன் (25), பாலசுப்பிரமணி (28), அணில் குமார் (20) ஆண்டவர் (20) என்பதும் கொள்ளையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், அரிவாள்,கத்தி, இரும்பு பைப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி கூறும் போது திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சமூக விரோதிகள்,

கொலை, கொள்ளை, அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட முன்னாள் குற்றவாளிகளை தீவிரமாக கண்காணித்து அவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட முயற்சி செய்வது தெரிய வந்தால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

Tags:    

Similar News