உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்ற 4 பேர் கைது

Published On 2022-06-29 09:22 GMT   |   Update On 2022-06-29 09:22 GMT
  • பேரளம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை ஒழிப்பு தீவிர தேடுதல் பணி பேரளம் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டது.
  • கலையரசன் பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள பேரளம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், கள்ளச்சாராயம் விற்பனை ஒழிப்பு தீவிர தேடுதல் பணி பேரளம் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டது.

பேரளம் அடுத்துள்ள நாடா குடி காளியம்மன் கோயில் தெரு கோவிந்தராஜ் மகன் பொட்டு என்கின்ற உலகநாதன் (வயது 50) தனது வீட்டிற்கு பின்பக்கத்தில், 110 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டறிந்த போலீசார் சாராயத்தை பறிமுதல் செய்தனர்மேலும் பொட்டு என்கின்ற உலகநாதன் கைது செய்தனர்.

அதேபோல் 3 கூத்தனூர் மேலத்தெரு ஜெகநாதன் மகன் கலையரசன் (வயது 56) என்பவர் தனது வீட்டின் பின்பக்கத்தில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். கலையரசன் பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் சாராயத்தைபறிமுதல் செய்து கைது செய்தனர்.

மேலும் அதே தெருவை சேர்ந்த கலையரசன் மகன் விக்னேஷ் (வயது 21), வீட்டின் அருகில் 10 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தபோது போலீசாரால் கண்டறியப்பட்டு, சாராயத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர். மேலும் அதே தெருவை சேர்ந்த கருணாகரன் மகன் கபிலன் (வயது 25) தனது வீட்டின் பின்பக்கத்தில், 10 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தபோது, போலீசாரால் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து கைது செய்தனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால், பேரளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News