உள்ளூர் செய்திகள்
நெல்லை மாநகராட்சி புதிய கமிஷனராக சிவகிருஷ்ணமூர்த்தி பதவியேற்ற போது எடுத்தபடம்.

நெல்லை மாநகராட்சி புதிய கமிஷனர் பதவியேற்பு

Published On 2022-06-03 10:43 GMT   |   Update On 2022-06-03 10:43 GMT
நெல்லை மாநகராட்சி புதிய கமிஷனராக சிவகிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்று கொண்டார்.
நெல்லை:

நெல்லை மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய விஷ்ணுசந்திரன் நகராட்சிகள் நிர்வாகத்தின் இணை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து புதிய கமிஷனராக சிவகிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டார்.

 அவர் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று தனது பொறுப்புகளை ஏற்று கொண்டார். அவரிடம்  கமிஷனர் விஷ்ணுசந்திரன் கோப்புகளை முறைப்படி ஒப்படைத்தார்.

பின்னர் சிவகிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் 2008-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். படிப்பை முடித்தேன். நெல்லை மாநகராட்சி கமிஷனராக என்னை நியமித்ததற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

பொதுசுகாதாரம், பள்ளிகளில் அடிப்படை கட்டுமான வசதிகள் குறித்து ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாநகராட்சியில் அனைத்து பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து விரைவில் முடிக்கப்படும்.

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் பணிகள் குறித்தகாலத்தில் தரமானதாக முடிக்கப்படும். பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் காலதாமதமின்றி கிடைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய கமிஷனராக பொறுப்பேற்றுள்ள சிவ கிருஷ்ணமூர்த்தி நெல்லை சப்-கலெக்டராக பணியாற்றி உள்ளார்.
Tags:    

Similar News