உள்ளூர் செய்திகள்
கடையம் வந்த செல்லம்மாள்-பாரதி ரதத்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்த காட்சி.

125-வது திருமணநாளையொட்டி வடிவமைக்கப்பட்ட செல்லம்மாள்-பாரதி ரதம் கடையம் வந்தது

Published On 2022-06-01 09:31 GMT   |   Update On 2022-06-01 09:31 GMT
125-வது திருமணநாளையொட்டி வடிவமைக்கப்பட்ட செல்லம்மாள்-பாரதி ரதம் கடையம் வந்தடைந்தது.
கடையம்:

மகாகவி பாரதியாரின் 125-வது திருமணநாள் விழாவை முன்னிட்டு சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில், பாரதி- செல்லம்மாள் சிலை சென்னையில் வடிவமைக்கப்பட்டு கடந்த 1 மாதமாக தமிழகம், புதுச்சேரி முழுவதும் சுற்றி வந்தது.

சுமார் 1,000 கிலோமீட்டர் சென்ற ரதம் -செல்லமாளின் சொந்த ஊரான தென்காசி மாவட்டம்  கடையத்திற்கு இன்று வந்து சேர்ந்தது. கடையம் வடக்கு தெரு பிள்ளையார் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்கள் ரதத்தை வரவேற்றனர்.

முன்னாள் தலைமை ஆசிரியர் கல்யாணி சிவகாமிநாதன் தலைமையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் கோபால் முன்னிலையில், லயன்ஸ் கிளப் குமரேசன் பத்திர எழுத்தர்கள் பால்சிங், ராஜசேகர் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.


ரதத்தில் இருந்த பாரதியார்- செல்லம்மாள் சிலைக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் சேவாலயா கிங்ஸ்டன் காஞ்சனா, ஒருங்கிணைப்பாளர் சங்கிலிபூதத்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். சேவாலயா நிறுவனர் முரளிதரன் நன்றி கூறினார்.

பின்னர் கல்யாணிபுரத்தில் நடந்த பாரதியார்- செல்லம்மாள் சிலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு கீழக் கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார்.
திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மலர்தூவி பாரதியார் சிலைக்கு மரியாதை செய்தனர்.

பாரதியாரின் நண்பர் சுடலைமாடன் என்பவர் வசித்த இல்லத்தை சேவாலயா நிறுவனர் முரளிதரன் சென்று பார்வையிட்டார். பாரதியார் கடையத்தில் இருந்தபோது இங்கு பலமுறை வந்து இருந்ததை அங்கிருந்த மக்களும் நெகிழ்ச்சியோடு நினைவுபடுத்தினர்.
Tags:    

Similar News