உள்ளூர் செய்திகள்
அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

மங்கலம் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2022-05-27 09:51 GMT   |   Update On 2022-05-27 09:56 GMT
மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மங்கலம்:

திருப்பூர் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் இன்று மங்கலத்தில் உள்ள கடைகள், பேக்கரிகள்,பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை  செய்யப்படுகிறதா என மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது  கடைகளில் விற்பனை செய்த ரூ.2000 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை  பறிமுதல் செய்தனர். 

இந்த ஆய்வில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் டாக்டர்.சௌமியா, மாவட்ட நலக்கல்வியாளர் ஜெயப்பிரகாசம்,உளவியலாளர் காஞ்சனா,சமூக பணியாளர் பிரவீன்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வரதராசு,மங்கலம் சுகாதார ஆய்வாளர் சிவநாதன் ,ரகுபிரகாஷ்,கார்த்திக்,நித்தின் உள்ளிட்ட சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News