உள்ளூர் செய்திகள்
விழாவில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார்.

விவசாயிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-05-27 08:36 GMT   |   Update On 2022-05-27 08:36 GMT
விசாயிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
ராஜபாளையம்

தமிழ்நாடு அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி  வைத்தார். 

ராஜபாளையம் தொகுதி தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். 
அவர் பேசுகையில், சமீபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக  கேரளா கொல்லத்திற்கு சென்றிருந்தேன். 

அங்கு எனது சட்டை பையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இருப்பதை பார்த்தவர்கள் இந்தியாவிலேயே சிறந்த முதல்வர்,  சிறப்பாக செயல்படக்கூடிய முதல்வர் இவர்தான்  என அடையாளம் காட்டி பாராட்டி பேசினர். 

அத்தகைய தருணம் முதல்வரை புகழும்  தமிழர்களின் பெருமையையும் நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்.

விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட்டு அனைத்து கிராமத்திலுள்ள விவசாயிகளும் வளர்ச்சி அடைய வேண்டுமென குறிக்கோள் வைத்து தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

ராஜபாளையம் தொகுதியில் உள்ள விவசாய பெருமக்களுக்கு விவசாய கடன், பயிர் கடன் போன்ற உதவிகளை பெற்றுத்தந்து விவசாயிகளின் வளர்ச்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்றார். 

மேலும் விழாவில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. விவசாயிகளுக்கு இடுபொருட்களையும் வழங்கினார். உதவி இயக்குநர் பத்மாவதி,  ஊரக வளர்ச்சி அலுவலர் சிவகுமார், வேளா ண்மைத்துறை அலுவலர்கள் தனலட்சுமி, சுருளி, கார்த்திக், தோட்டக்கலைத்துறை கலைவாணி, நீர்வளத்துறை பொறியாளர் சந்திரமோகன் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News